search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுக்கி அணையில் நீர் திறப்பு"

    இடுக்கி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Idukkidam
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பெரிய அணைகளில் ஒன்று இடுக்கி. இங்கு 2403 அடிக்கு தண்ணீர் தேக்கலாம். இந்த அணையில் 2398 அடி தண்ணீர் தேங்கினால் அணை திறக்கப்பட வேண்டும். கடந்த 1992-ம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அதன்பின்பு இப்போது தான் அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது.

    இன்று காலை இந்த அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் மதகுகள் இன்று மதியம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.



    அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். #Idukkidam

    ×